அரியலூர் மாவட்டம் அரியலூர் நகரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
அரியலூர் மாவட்டம் அரியலூர் நகரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி ஆண்டுதோரும் வெகு விமர்சையாக நடைபெற்றது. இக்கோவிலுக்கு அரியலூர் நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்லும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்கோவில் இந்தாண்டு கந்த சஷ்டி விழா கடந்த 22 ஆம் தேதி காப்பு கட்டுடன் துவங்கியது. நாள்தோறும் யாக சாலை பூஜை, அபிஷேக பூஜை, திருவீதி உலா நடந்தது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி இன்று இரவு

நடைபெற்றது. நேற்று தாயிடம் இருந்து வேலை பெற்றுக்கொண்ட முருகப்பெருமான், இன்று வேல் தாங்கி சூரனை எதிர்கொண்டார். பல்வேறு ரூபங்களில் வந்த சூரன் முருகப்பெருமானை எதிர் கொண்டும் மறைவிடத்திற்கு ஓடி சென்றோம் முருகப்பெருமானுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் போரிட்டார். ஒவ்வொரு ரூபத்தையும் வேலால் வதம் செய்த முருகப்பெருமான் இறுதியில் சூரபத்மனை ஆட்கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்தனர்.
பின்னர் பக்தர்களுடன் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்ட முருகனுக்கு மகா தீபாரதனை நடைபெற்றது. முருகப்பெருமான் தனது வேளாண் சூர பத்மனை ஒவ்வொரு முறையும் வதம் செய்யும் பொழுது பக்தர்கள் “கந்தா” “கடம்பா” “முருகா” “வேலா” என்ன பக்தி குரல் எழுப்பி வழிபட்டனர்.

