நாகை உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா இன்று (ஆகஸ்ட் 29, 2025) கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. கொடியேற்றத்திற்கு பக்தர்கள் பாத யாத்திரையாக செல்வதால் கடற்கரை சாலை, பட்டினப்பாக்கம் லூப் சாலை மற்றும் அடையார் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால்,
மாற்று வழிகளில் செல்ல போக்குவரத்துப் போலீசார் அறிவுறுத்தினர்
இந்தத் திருவிழா மாதாவின் பிறந்தநாளை முன்னிட்டு 10 நாட்கள் (செப்டம்பர் 8 வரை) நடைபெறும். கொடியேற்ற நிகழ்ச்சியில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் தம்புராஜ் திருக்கொடியை ஏற்றி விழாவைத் தொடங்கி வைத்தார், மேலும் பலூன்கள் மற்றும் புறாக்கள் பறக்கவிடப்பட்டன.
விழாவின் முக்கிய நிகழ்வான ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர் பவனி செப்டம்பர் 7 அன்று இரவு 7:30 மணிக்கு நடைபெறும். தமிழ்நாடு, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொள்கின்றனர். பாதுகாப்பிற்காக 3,500க்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், மேலும் சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.