Skip to content

துணை ஜனாதிபதி தேர்தல் பணிகள் தொடக்கம்

இந்திய துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்த நிலையில் புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான கணிகள் தொடங்கி உள்ளது.  தன்கர் ராஜினாமா  செய்ததை  மத்திய அரசு அரசிதழில்(கெசட்) வெளியிட்டது.  எனவே இன்னும் 2 நாளில் தேர்தல் ஆணையம்  தேர்தல் அறிவிக்கையை வௌியிடும் என்ற எதிர்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.

துணை ஜனாதிபதி தேர்தலில் மக்களவை, மாநிலங்களவை  உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள். மொத்தமுள்ள எம்.பிக்களின் பாஜக மற்றும் அத்ன கூட்டணி கட்சிகளுக்கு 427 பேர் உள்ளனர். எதிர்கட்சிகளுக்கு 355 பேர் ஆதரவு தான் உள்ளது. பாஜக கூட்டணிக்கு 72 எம்.பிக்கள் அதிகம் உள்ளதால், பாஜக  நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெற வாய்ப்புள்ளது. சுதந்திர தினத்திற்கு முன் துணை ஜனாதிபதி தேர்தல் நடத்தி  தேர்வு செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது.

இந்த நிலையில் இன்று பிரதடர் மோடியும், அமித்ஷாவும்  துணை ஜனாதிபதி தேர்தல் , மற்றும் வேட்பாளர் தேர்வு  குறித்து ஆலோசனை நடத்தினர்.

error: Content is protected !!