சென்னை , மாமல்லபுரத்தில் சிறப்பு பொதுக்குழுக்கூட்டம் தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழுகூட்டத்தில் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் தவெக கொள்கை தலைவர்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் விஜய். தவெக பொதுக்குழுக் கூட்டத்தில் விஜயின் பெற்றோர் பங்கேற்றனர்.
தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. பொதுக்குழுவில் தவெக கொள்ளை விளக்க பாடல் வௌியிடப்பட்டது.
இந்தப்பொதுக்குழு கூட்டத்தில் என். ஆனந்த் பேசியதாவது..
தவெக தொடங்கி 2 வருடம் 9 மாதங்கள் ஆகிவிட்டது . பல தடைகளை தாண்டி வந்திருக்கிறோம். இன்று அரசியலின் மைய புள்ளி தலைவர் விஜய் தான். 2026ல் தவெக தலைவர் விஜய்-ஐ முதல்வர் ஆக்க வேண்டும். மக்கள் விரும்பும் மாற்றத்தை கொடுக்கும் ஒரே கட்சி தவெக என்று கூறினார்.
தவெக பொதுக்குழு கூட்டத்தில்12 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதல் தீர்மானத்தை கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் வாசித்தார்.
- கரூரில் செயற்கையான அசம்பாவிதங்கள் நடந்ததா என சந்தேகம். விஜய்க்கு மக்கள் அளித்த ஆதரவு அதிகார வர்க்க்த்திற்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
2.கோவை மாணவி வன்கொடுமை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்.
- தமிழக மீனவர்கள் கைதை கண்டித்து பொதுக்குழுவில் தீர்மானம். தமிழக மீனவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும். மீனவர்கள் விவகாரத்தில் மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். இலங்கையிடம் உள்ள மீனவர்கள் படகுகளும் மீட்கப்பட வேண்டும்.
- வாக்காளர் உரிமையை பறிக்கும் SIR-க்கு எதிராக தவெக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம். வாக்காளர் பட்டியல் திருத்தத்தை நிறுத்தி வைக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் வாக்கு உரிமையை பறிக்கும்.
- விவசாயிகளிடம் உரிய நேரத்தில் நெல் கொள்முதல் செய்யவில்லை. நெல் கொள்முதலுக்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வௌ்ளத்தில் இருந்து சென்னை மக்களை போர்க்கால அடிப்படையில் பாதுகாக்க வேண்டும். மழைக்கு முன் சென்னையில் வடிகால் பணிகளை முடிக்க வேண்டும்.
- பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமானம் மேற்கொள்ள தவெக கண்டனம். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமானம் மேற்கொள்வதை கண்டித்து தவெக தீர்மானம். பள்ளிக்கரணை சதுப்பு நில கட்டுமானத்திற்கு அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.
- விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் மக்களுக்கு பாதுகாப்பு. விஜய் கூட்டங்களுக்கு வேண்டுமேன்றே போதிய பாதுகாப்பு செய்வதில்லை. நமது குரலை ஒடுக்க தேவையற்ற விதிமுறைகள் வகுக்கப்பட்டன. தமிழ்நாட்டில் அரசியல் மாற்றத்திற்காகவே விஜய்யின் மக்கள் சந்திப்பு.தவெக தொண்டர்களுக்கு பாதுகாப்பு. விஜய்க்கு கொடுத்தது போல யாருக்கும் மக்கள் வரவேற்பு கொடுக்கவில்லை. தமிழக அரசின் அலட்சியத்தை தவெக பொதுக்குழு கண்டிக்கிறது. விஜய் கூட்டங்களுக்கு தமிழக அரசு முழுமையாக பாதுகாப்பு வழங்க வேண்டும்.
- தவெக மீதும் , கட்சி நிர்வாகிகள் மீதும் அவதூறு பரப்பும், ஆளும்கட்சியினருக்கு கண்டனம். தமிழ்நாட்டில் தொழில்துறை, வேலைவாய்ப்புகள் குறித்து வௌ்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
- தவெக நிர்வாகிகள் மீது ஆளும்கட்சியினர் அவதூறு பரப்புகின்றனர். தவெக முதல்வர் வேட்பாளர் விஜய் என பொதுக்குழுவில் தீர்மானம்.
- தமிழ்நாட்டில் ஜனநாயக அடிப்படையில் பொது பிரச்சனைக்கு கருத்து தெரிவிப்பவர்கள் கைதுக்கு கண்டனம். கருத்துரிமையை சிதைக்கும் தமிழக அரசுக்கு கண்டனம்.
- தவெக கூட்டணி நிலைப்பாட்டில் தவெக தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

