திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக முசிறி, தொட்டியம் வழியாக நாமக்கல் எல்லைப்பகுதியான களத்தூர் சென்றடைந்தார் தவெக தலைவர் விஜய். அவருக்கு ஆரத்தி எடுத்து தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். களத்தூரிலிருந்து தனது பிரசார வாகனம் மூலம் நாமக்கல் நகருக்கு விஜய் பயணம் செய்கிறார். வழி நெடுக விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
திருச்சியில் இருந்து நாமக்கல்லுக்கு சென்றுள்ள தவெக தலைவர் விஜய் இன்னும் சற்று நேரத்தில் தனது பரப்புரையை தொடங்க உள்ளார். பிரசாரத்திற்காக நாமக்கல் மாவட்ட எல்லையில் வந்துள்ள தவெக தலைவர் விஜயை பார்க்க வழிநெடுக தொண்டர்கள் நிற்பதால், அவரது வாகனம் மெதுவாக நகர்ந்து வருகிறது. இதையடுத்து வாகனத்தில் இருந்தபடி முன் உள்ளவர்கள் வழிவிடும்படி கேட்டுக் கொண்டுள்ளார் விஜய்.