தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் பிரச்சார பயணத்தை முன்னிட்டு கரூரில் குவியத் தொடங்கிய நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள்.
கரூர்,வேலுச்சாமி புரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மூன்று மணி அளவில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இந்த நிலையில் வேலுச்சாமிபுரம் பகுதி முழுவதும் கட்சி தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் சாலை ஓரங்களில் பிளக்ஸ் பேனர்கள்,
கொடிக்கம்பங்கள் நட்டு வைத்து உள்ளனர். இந்த நிலையில் நாமக்கல்லில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு விஜய் கரூர் வரவுள்ள நிலையில் வேலுச்சாமிபுரம் பகுதியில் தொண்டர்கள் ரசிகர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் அப்பகுதியில் குவியத் தொடங்கியுள்ளனர்.
அப்பகுதியில் விஜய் பாடல் பாடலுக்கு ஆண்கள்,பெண்கள் சிறுவர்கள் என அனைவரும் உற்சாகமாக நடனமாடி கொண்டாடி வருகின்றனர்.