Skip to content

X-தளத்தில் Cover photoவை மாற்றினார் விஜய்

2026 சட்டமன்ற தேர்தலுக்கான தயாரிப்பில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. ஒருபக்கம் கூட்டணியின் முடிவுகள் அறிவிப்பு, இன்னொரு பக்கம் தேர்தல் அறிக்கைகள் என பரபரப்பான சூழல் நிலவிவரும் நிலையில், விஜய் தலைமையில் புதியதாக களம்கண்டுள்ள தமிழக வெற்றிக் கழக கட்சியும் முதல் மக்கள் தேர்தலுக்காக சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றது.

கரூர் கூட்ட நெரிசலுக்கு பிறகு மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்தி மீண்டும் அரசியல் நகர்வில் தீவிரம் காட்டிவரும் தவெகவிற்கு மகிழ்ச்சியான செய்தியை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு விசில், ஆட்டோ, கிரிக்கெட் மட்டை, சாம்பியன் கோப்பை என 10 விருப்ப சின்னங்களைக் கோரி தவெக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு

அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தவெகவினரின் மிகவும் விருப்பப்பட்ட சின்னமான விசிலை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் விசில் சின்னத்தில் தவெக போட்டியிடவிருக்கிறது. இருப்பினும் இது இந்த ஒரு தேர்தலுக்கு மட்டுமே இந்த சின்னம் என்றும், தவெக போட்டியிடாத தொகுதிகளில் மற்றவர்களுக்கும் விசில் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் துணை பொதுச்செயலர் நிர்மல் குமார், ’விசில் சின்னம் எங்கள் தலைவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட, அவர் மிகவும் விரும்பிய சின்னம், இச்சின்னத்தை அனைவரிடமும் கொண்டு சேர்ப்போம். விசில் சின்னம் நிச்சயம் வெற்றி சின்னமாக இருக்கும் என தெரிவித்தார்.

இந்நிலையில், சற்று முன் எக்ஸ் தளத்தில் விசில் சின்னம் இருக்கும் படத்தை பதிவேற்றம் செய்தார் தவெக தலைவர் விஜய்.

error: Content is protected !!