தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜயின் கரூர் வேலுச்சாமிபுரம் பிரச்சாரக் கூட்டத்தில் (செப்டம்பர் 27, 2025) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், போலீஸ் FIR-ல் விஜய் வேண்டுமென்றே 4 மணி நேரம் தாமதப்படுத்தி கூட்டத்தை அதிகரித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த துயரத்தில் 10 குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர், 110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
போலீஸ், தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் மீது 4 கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது.FIR-ல் கூறப்பட்டுள்ளதாவது “அரசியல் பலத்தை பறைசாற்ற, கூட்டத்தை அதிகரிக்க விஜய் திட்டமிட்டு காலதாமதம் செய்தார். அசாதாரண சூழலை எச்சரித்தும் ஆனந்த் கேட்கவில்லை. நிர்வாகிகள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவில்லை. அனுமதியின்றி சாலைவழியாக வாகனம் ஓட்டி, முனியப்பன் கோவில் ஜங்ஷனில் ராங்ரூட்டில் நெருக்கடி ஏற்படுத்தினர்.
நீண்ட காத்திருப்பால் மக்கள் வெயில், தாகத்தில் சோர்ந்தனர். தொண்டர்கள் சாலைக் கடைகள், மரங்கள், மின்கம்பங்களில் ஏறியதால் கொட்டகைகள் உடைந்து, மரங்கள் முறிந்து விழுந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டது எனவும் கூறப்பட்டுள்ளது. அதே போல உயிர்ச் சேதம் ஏற்படும் என தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாவட்டச் செயலாளரை எச்சரித்தோம்.
பலமுறை எச்சரித்தும், அறிவுரை வழங்கியும் தவெக நிர்வாகிகள் அதனை கேட்கவில்லை எனவும், நாமக்கல் டவுன் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கரூர் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக ஏ.டி.எஸ்.பி. பிரேம் ஆனந்த் தலைமையில் தனிப்படை விசாரணை நடைபெறுகிறது. தவெக, ‘சதி’ என மதுரை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ கோரியுள்ளது, ஆனால் நீதிமன்றம் நாளை (செப்டம்பர் 30) தாக்கல் அறிவுறுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடதக்கது.