Skip to content

விஜய் அரசியலுக்கு வந்தால் அவரை வாழ்த்துவேன்… நடிகர் விஷால்

நடிகர் விஷால் இன்று தனது 45வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விஷால் இன்று தனது பிறந்தநாளையொட்டி சென்னை கீழ்பாக்கத்தில் கருணை இல்லத்தில் உள்ள ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு வழங்கி மகிழ்ந்தார். மேலும் இல்லத்தில் உள்ள குழந்தைகளுடன் கேக் வெட்டி, குழந்தைகளுடன் அமர்ந்து உணவு அருந்தியதோடு குழந்தைகளுக்கு அவர் உணவு ஊட்டினார். இதைதொடர்ந்து சென்னை கீழ்பாக்கத்தில் நடிகர் விஷால் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் அவரை வாழ்த்துவேன். சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த வயதிலும் திரையில் சாதனை படைத்து வருகிறார். 45 ஆண்டுகக்கு முன் கொடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் மூலம் நடிகர் ரஜினி மக்களை மகிழ்வித்து வருகிறார் என்றார் . மேலும் மக்கள், ரசிகர்கள் அளிக்கும் ஆதரவே மகத்தான விருது என தேசிய விருது குறித்து கருத்து தெரிவித்தார். 4 பேர் அமர்ந்து கொண்டு விருதாளர்களை தேர்வு செய்வது என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!