கரூர் விவகாரத்தில் முதலமைச்சர் பெருந்தன்மையோடு நடந்து கொண்டார் ஆனால் விஜய் தொடர்ந்து பொய் பேசி வருகிறார் – திருச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் பேட்டி
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் டெல்டா மண்டல நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது . அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய வேல்முருகன்…
கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் ஒரு இடத்தில் போட்டியிட்டோம் இந்த முறை கூடுதல் இடங்களை போட்டியிடுவதற்கு கேட்டுள்ளோம். பேச்சுவார்த்தையின் போது அது இறுதி செய்யப்படும்.
தேர்தல் நேரத்தில் மக்களிடம் வாக்குறுதிகளை கொடுத்து மக்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவதற்கு அரசியல் கட்சிகள் பல்வேறு யுத்திகளை கையாளுவார்கள்
அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமியும் ஒரு யுத்தியை கையாண்டு உள்ளார்.
ஒவ்வொரு கட்சியும் தேர்தல் நேரத்தில் அவர்களுக்கான இடங்கள் கோரிக்கைகள் அடிப்படையில் கூட்டணியில் இணைவார்கள் இந்த நிலையில் திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்து இருப்பதை கொள்ளையடிப்பதற்காக என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டின் அரசியல் சூழல் தெரியாமல் பண்பாடற்ற, புரிதல் அற்ற செய்திகளை தான் விஜய் நேற்று பேசியுள்ளார்.
கரூர் சம்பவத்தின் போது அந்த சம்பவம் குறித்து பேசிய முதலமைச்சர் மிகவும் நாகரிகமான முறையில் யாரையும் விமர்சிக்காமல் பேசினார். இன்னும் சொல்லப்போனால் விஜய்க்கு சாதகமாக தான் அவர் பேசினார்.
திமுக அரசு நினைத்திருந்தால் 41 பேர் மரணத்திற்கு விஜய் தான் காரணம் எனக் கூறி அவரை கைது செய்திருக்க முடியும் ஆனால் முதலமைச்சர் அதை செய்யவில்லை. அவர் பெருந்தன்மையோடு நடந்து கொண்டார்.
ஆனால் விஜய் தொடர்ந்து பொய்யான கருத்துக்களை கூட்டங்களில் பேசி வருகிறார்.
யாரோ எழுதிக் கொடுப்பதை தான் அவர் பேசி வருகிறார். விஜய் சிறந்த முறையில் ஆட்சி செய்வார் என நம்பும் கூட்டத்தை பார்த்தால் தான் பாவமாக இருக்கிறது.
விஜய்க்கு தமிழ்நாட்டின் புவியியல் அரசியலும் தெரியவில்லை, சமூக அரசியலும் தெரியவில்லை நிர்வாக முறையும் தெரியவில்லை.
எந்த நடிகராக இருந்தாலும் அவரைப் பார்க்க மக்கள் வரத்தான் செய்வார்கள்.
சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த தலைவர்கள் பேசாத பெருமிதத்தை விஜய் பேசுகிறார். அவர் பேச்சு நகைப்புக்குறியாதாகத்தான் இருக்கிறது. விஜயின் பேச்சுக்கள் அவரின் அனுபவமின்மையை தான் காட்டுகிறது.
எல்லா கட்சிகளும் ஒவ்வொரு காலகட்டத்தில் மற்ற கட்சிகளை விமர்சனம் செய்து இருப்பார்கள். எங்கள் கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் ஒருவருக்கொருவர் விமர்சனம் செய்துள்ளார்கள். ஆனால் இன்றைய சூழலில் மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்துகிற கூட்டத்தை எதிர்ப்பதற்கும் தமிழ்நாட்டில் என் டி ஏ கூட்டணி ஆட்சி என பேசும் அமித்ஷாவுக்கு சரியான பாடத்தை புகட்டுகின்ற ஒரு அணியாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமைய வேண்டும் என்பதுதான் எல்லோருடைய விருப்பம். எங்களின் பிரதான எதிரி பாஜக தான் என்றார்.

