தமிழக வெற்றுக்கழக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் 50,000 அதிகமானோர் விருப்ப மனுக்களை வாங்கிய நிலையில் அதில் 5000க்கும் குறைவான மனுக்களை தான் பூர்த்தி செய்து கட்சி தலைமைக்கு திருப்பி வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2026 சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமான சூழ்நிலையில் அண்மையில் தவெக 234 தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் விருப்பமனு தாக்கல் செய்ய தவெக தலைவர் விஜய் ஒப்புதலுடன் பொதுச் செயலாளர் ஆனந்த் விருப்பமனுவை வெளியிட்டார். அன்று ஒரே நாளில் ஒன்றரை மணி நேரத்தில் 10 ஆயிரம் விருப்பமனுக்கள் விற்று தீர்ந்தது. மேலும் அதிகமானோர் வந்து கொண்டே இருந்த காரணத்தினால் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், பொது மக்களை இன்னலுக்கு ஆளாக்காமல் இருக்கவும் விருப்பமனுக்கல் இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து தகுந்த சான்றிதழ்களுடன் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் கட்சி அலுவலகத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் அதிகமான பேர் மின்னஞ்சல் மூலம் விருப்பமனுக்களை அனுப்பி வைத்துள்ளனர். தமிழக வெற்றுக்கழக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் 50,000 அதிகமானோர் விருப்ப மனுக்களை வாங்கிய நிலையில் அதில் 5000க்கும் குறைவான மனுக்களை தான் பூர்த்தி செய்து கட்சி தலைமைக்கு திருப்பி வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக எல்லா கட்சிகளிலும் தேர்தலில் போட்டியிட விரும்பும் உறுப்பினர்களுக்கு விருப்ப மனு கட்டணமாக பத்தாயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்படும். ஆனால் தமிழக வெற்றி கழகத்தைப் பொறுத்தவரை மனு நூறு ரூபாய் மனுவை வாங்கி பூர்த்தி செய்து திருப்பிக் கொடுக்கும் பொழுது பொது பிரிவினர் பத்தாயிரம் ரூபாய் எஸ்சி எஸ்டி பிரிவினர் 5000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் மனுவை வாங்கிய பெரும்பாலானோர் அதை திருப்பிக் கொடுக்கவில்லை.

