தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வருகிற 13 ந்தேதி திருச்சியில் தனது சுற்றுப் பயணத்தை தொடங்க இருக்கிறார். இதையொட்டி சுற்றுப்பயணத்திற்கு அனுமதி கேட்டு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு கொடுத்தார். அப்பொழுது போலீசார், தொண்டர்களை உள்ளே அனுமதிக்கதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திரை உலகில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் தனது மன்றத்தை சென்ற ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். தமிழக வெற்றிக்கழக முதல் மாநாடு சென்ற ஆண்டு விழுப்புரத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது மாநாடு மதுரையில் கடந்த மாதம் 21ந்தேதி நடைபெற்றது. இரண்டு மாநாடுகளும் வெற்றி பெற்ற நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னம் சில மாதங்கள் இருக்கும் நிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் பத்து வாரங்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அந்த வகையில் தனது சுற்றுப்பயணத்தை திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து, வருகிற 13ந் தேதி தொடங்க உள்ளார்.இதற்காக திருச்சி மாநகர காவல்துறை அனுமதி பெற அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸ ஆனந்த் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் தொண்டர்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்திற்கு நிர்வாகிகளுடன் சென்று புஸ்ஸி ஆனந்த் அனுமதி கோரி கடிதத்தை திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் வழங்க நிர்வாகிகளுடன் காரில் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் நோக்கி புஸ்ஸி ஆனந்த் சென்றார். இதையடுத்து திருச்சி – புதுக்கோட்டை முதன்மை சாலையில் உள்ள சர்வ சித்தி வல்லப விநாயகர் ஆலயத்தில் சுவாமி முன்பாக அனுமதி கோரும் கடிதத்தை வைத்து மனமுருகி பிரார்த்தனை செய்தார். பிறகு போலீஸ் அனுமதி கடிதத்தை எடுத்து கொண்டு அங்கிருந்து போலீஸ் கமிஷனர் அலுவலகம் நோக்கி சென்றார்.
அப்பொழுது த.வெ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானவர்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில்
மனு அளிக்க காலை 11 30 க்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில் தவெகவினர் அனுமதி அளிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பே வந்ததால் அவர்களை உள்ளே அனுமதிக்க போலீசார் மறுப்பு தெரிவித்தனர். மேலும் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் உள்ளே செல்ல அனுமதி கிடையாது. ஒரு சிலர் மட்டும் தான் மனு கொடுக்க செல்ல வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர். இதனால் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் இருந்த பாதுகாப்பு போலீசாரிடம் த.வெ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். இதனால் போலீசாருக்கும், தொண்டர்கள் இடையே சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு புஸ்ஸி ஆனந்த், தெற்கு மாவட்டச் செயலாளர் குடமுருட்டி கரிகாலன் ஆகிய இருவர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
பிறகு அவர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று விஜய் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி கேட்டு மனு கொத்தனர். மனு கொடுக்க போலீசார் தொண்டர்களை உள்ளே செல்ல அனுமதிக்காதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுற்றுப்பயணமானது திருச்சி மாவட்டம் முழுவதும் நடைபெறும் வகையில் . திட்டமிடபட்டுள்ளதால் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு
புஸ்ஸி ஆனந்த் சென்று அனுமதி கோரி கடிதம் அளித்தார். பிறகு சுற்றுப் பயணம் மேற் கொள்ளும் திருச்சி மாநகர பகுதி மரக்கடை இடத்தையும், திருவரங்கம் ராஜகோபுரம் இடத்தையும் த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பார்வையிட்டு சென்றார்.