கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நடிகர் விஜய் பரப்புரைக்கு கூட்டம் வரத்தான் செய்யும் இதுவரை திரையில் பார்த்தவர்களை நேரில் திரும்ப வரும்போது பார்ப்பதற்க்கு வருவார்கள்,
நாங்கள் சிறு பிள்ளையாக இருக்கும் போது எம் ஜி ஆர், சிவாஜி வருகிறார்கள் என்று நின்ற காலம் உண்டு.கடைசியாக அவர் வரவில்லை என ஏமாந்ததும் உண்டு.
சகோதரர் அஜித் வந்தார் என்றால் இதை விட கூட்டம் வரும்,ரஜினி மற்றும் நயன்தாரா வந்தால் இதை விட இரண்டு மடங்கு கூட்டம் வரும்.கூட்டத்தை பார்க்காதீர்கள் முன் வைக்கும் கொள்கையை பாருங்கள்.மக்களுக்காக பாடுபடும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி என தெரிவித்தார்.