Skip to content

கரூரில் விஜய் நாளை பிரச்சாரம்… நிகழ்விடத்தை ஆய்வு செய்த ஆனந்த்..

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் நாளை பிற்பகல் 12 மணியளவில் பிரச்சாரம் – நிகழ்விடத்தை ஆய்வு செய்த என்.ஆனந்த் பேட்டி.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சனிக்கிழமைகளில் மக்கள் சந்திப்பு பயணம் மூலம் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். நாளை 27 ஆம் தேதி கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

காலை நாமக்கலில் பிரச்சாரம் செய்யும் விஜய், மாலை கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் தனது மக்கள் சந்திப்பு பயணம் மூலம் பிரச்சாரம் செய்கிறார். அந்த இடத்தில் பிரச்சாரம் செய்வதற்கு மாவட்ட காவல்துறை அனுமதி அளித்ததை அடுத்து, கட்சி நிர்வாகிகளுடன் அப்பகுதிக்கு வந்த தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அப்பகுதியை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து விஜய் பிரச்சாரம் செய்யும் இடம் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த என்.ஆனந்த் கரூரில் நாளை பிற்பகல் 12 மணியளவில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்கிறார் என பேட்டியளித்தார்.

error: Content is protected !!