Skip to content

விரைவில் விஜய் சுற்றுப்பயணம்… செங்ஸ் தகவல்

  • by Authour

தமிழக வெற்றிக் கழக தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, அவரது உருவபடத்திற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதனைதொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- தமிழகம் முழுவம் மாவட்ட அலுவலகங்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மாமேதை அம்பேத்கரின் நினைவு நாள் இன்று ஒவ்வொரு பகுதியிலும் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நினைவுநாளில் அவரது புகழை போற்றும் வகையில் அவரது புகைப்படத்திற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. இது தலைமை கழகத்தின் ஆணைப்படி நடக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். ஆணவம் என்பது உண்மையை மறைக்கும். கற்பனை உலகில் வாழ்ந்துகொண்டு இருக்கக் கூடாது. இளைஞர்களின் எழுச்சி நாயகனாக, எதிர்காலத் தமிழகத்தை ஆளப்போகின்ற தலைவர் விஜய் அவர்கள் இன்று சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். ஆகவே இளைஞர்களின் எழுச்சி நாயகன் மட்டுமில்லை, எதிர்கால தமிழகத்தை ஆளும் சக்தியாக தமிழக மக்களால் உருவாக இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். அப்போது சசிகலா நீங்கள் எடுத்த முடிவு அவசரப்பட்டு எடுத்த முடிவு என கூறியது குறித்து கேள்வி எழுப்பினர். ஆனால் அதற்கு செங்கோட்டையன் பதில் எதுவும் அளிக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.

நேற்று செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து சசிகலாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து அவர் கூறுகையில், “ஒருவர் மேல் இருக்கின்ற கோபத்தினால் அவசரப்பட்டு முடிவு எடுக்க கூடாது.. அவர் எடுத்த முடிவு அவசரப்பட்டு எடுத்த முடிவாக என்னுடைய கருத்தாக இதை சொல்கிறேன்” என்று கூறியிருந்தார்.

error: Content is protected !!