ஜனநாயகன் படப் பிரச்சினை, சிபிஐ விசாரணை உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை விஜய் சந்தித்து வரும் நிலையில், தவெகவிற்கு பொதுச் சின்னம் கிடைக்குமா? என்பது தொடர்பாக கடந்த சில நாட்களாக அக்கட்சி தொண்டர்கள் இடையே விவாதம் அதிகரித்திருந்த நிலையில், விஜய்யின் தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விசில் சின்னத்தை விஜய் கோரிய நிலையில், அதே சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.
இந்த நிலையில், மோகன் ஜியின் திரெளபதி 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த பாஜக பிரமுகரும், நடிகையுமான கஸ்தூரி, செய்தியாளர்களிடம் பேசுகையில், “விஜய் விசில் சின்னம்தான் கேட்பார் என ஒரு ஆண்டுக்கு முன்னதாகவே பேசினேன்; அது நான் கொடுத்த ஐடியாதான்; தை பிறந்ததும் அவருக்கு சின்னம் பிறந்திருக்கிறது; அடுத்ததாக அவர் சேர வேண்டிய இடத்திற்கு வழி பிறந்திடும்” என்று தெரிவித்துள்ளார்.

