Skip to content

தன் மகனை காதலித்து ஏமாற்றிய பெண் மீது வழக்குக்கோரி… தாய்- ஊர்மக்கள் போராட்டம்..

மயிலாடுதுறை அருகே தலைஞாயிறு மெயின்ரோட்டை சேர்ந்தவர் சரத்குமார்(29) என்பவர் குவைத்தில் வேலைபார்த்த இடத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் அவரது உடல் நேற்றுமுனதினம் மதியம் ஆம்புலன்ஸ்மூலம் தலைஞாயிறு எடுத்துவரப்பட்டது. அந்த ஆம்புலன்ஸை தலைஞாயிறு பகுதி மக்கள் மறித்து சாலை மறியல் போராட்டத்தை தொடர்ந்தனர். சரத்குமார் மரணத்திற்கு காரணமானவர்கள்மீது வழக்குப் பதிவுசெய்து அவர்களைக் கைதுசெய்யவேண்டும் சரத்குமாரை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்ததுடன் அவரிடமிருந்து ரூ.2 லட்சம் மற்றும் 15 பவுன் நகைகளை வாங்கியுள்ளதாகவும் அதையும் பெற்றுத்தரும்வரை சரத்குமார் உடலை அடக்கம் செய்யமாட்டோம் என்று சரத்குமாரின் தாயால் பிடிவாதமாக கூறி சாலையில் அமர்ந்தார் அவருடன் ஊர் மக்கள் 500க்கும்மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இரவு 7.30 மணிவரை இந்தப் போராட்டம் நீடித்தது. சரத்குமார் காதலித்த பெண் சங்கீதா, இவர் சரத்குமாரின் உறவுக்காரப் பெண், கடந்த 10 ஆண்டுகளாக காதல் தொடர்ந்துள்ளது, வெளிநாடு சென்றும் காதல் தொடர்ந்துகொண்டே இருந்ததால் பணமும் நகையும் அனுப்பி வைத்துள்ளார் சரத்குமார்.

இந்நிலையில் சங்கீதாவின் ஸ்கூட்டி காணாமல் போயுள்ளது, இதுகுறித்து சங்கீதா வைத்தீஸ்வரன்கோயில் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சூரியமூர்த்தி என்பவரிடம் புகார் அளித்துள்ளார், 4 நாட்களில் வாகனத்தைக் கண்டுபிடித்து ஒப்படைத்துள்ளார், திருமணமாகத சூரியமூர்த்தி சங்கீதாவுக்கு காதல் வலை வீசியுள்ளார், வெளிநாட்டில் டிரைவர் வேலை பார்க்கும் சரத்குமாரைவிட அரசு வேலை செய்யும் எஸ்.ஐ. எப்பளவோ தேவலை என்று நினைத்து தனது முதல் காதலை கைகழுவியுள்ளார். சரத்குமாரிடம் வாங்கிய நகை மற்றும் பணத்தை பற்றி நினைத்தபோது மனது வலித்துள்ளதால், சரத்குமாருக்கு வாட்ஸப்கால் செய்து நான் எஸ்ஐ ஒருவரை விரும்புகிறேன், என்னை மறந்துவிடு என்று சொல்லியுள்ளார், வெளிநாட்டில் ஒருவரது வீட்டில் தனியாக தங்கி ஓட்டுனர் வேலை பார்த்துவந்தவருக்கு மனதே நொருங்கிவிட்டது, நடந்ததற்கு ஆறுதல் சொல்ல நண்பர்கள் இல்லை என்பதால், தனது வீட்டாரிடம் கூறி புலம்பியுள்ளார். பெற்றோர்கள் பயந்துபோய் நீ ஊருக்குவா நாம் பேசிக்கொள்வோம் என்று கூறியும் சரத்குமார் மனமொடிந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த தகவல் பரவியதும், சங்கீதா தனது குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டார். வைத்தீஸ்வரன்கோயில் எஸ்ஐ சூரியமூர்த்தியை மயிலாடுதுறை ஆயுதப்படைக்கு மாற்றினர்.

இந்நிலையில் சரத்குமார் உடல்தான் கடந்த 2ஆம் தேதி ஊருக்கு வந்தபோது சரத்குமாரின் தாயாலும் ஊர்மக்களாலும் மறிக்கப்பட்டிருந்தது. இதனிடையே தஞ்சை சரக டிஐஜி ஜியாவுல்ஹக் உத்தரவின்பேரில் எஸ்.ஐ சூரியமூர்த்தியை மயிலாடுதுறை ஆயுதப்படையிலிருநது தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்தனர்.
போராட்டக் காரர்களிடம் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, சங்கீதா மீது வழக்குப்பதிவு செய்து 16 மணி நேரத்தில் அவரை கைது செய்வதாக போலீஸார் அளித்த உறுதிமொழியை ஏற்று கிராமமக்கள் 7 மணிநேரம் நடத்திய சாலை மறியல் போராட்டத்தை விலக்கிக் கொண்டு இரவு 7.30 மணிக்கு கலைந்து சென்றனர். காதலிப்பதாக கூறி ஏமாற்றி பணம் நகையை பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக, சங்கீதாமீது மணல்மேடு போலீசார், ஜாமீனில் வெளிவரமுடியாத பி.என்.எஸ். 318(4) பிரிவின்கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்து தேடிவருகின்றனர்.

தன் மகனை காதலித்து ஏமாற்றிய பெண்மீது வழக்குப் பதிவுசெய்ய தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட தாயை தலைஞாயிறு மற்றும் பட்டவர்த்தியை சேர்ந்தவர்களும் ஆறுதல்கூறியதுடன் பிடிவாதமாக இருந்த தாயை சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டினர். காதலியை ஏமாற்றிய காதலன் மீது வழக்கு போடப்பட்டுவருவதை கண்ட மயிலாடுதுறை மக்கள், காதலித்த பெண் ஏமாற்றினால் அவர்மீதும் கடுமையான சட்டம் பாயும் என்பதற்கு இது முன் உதாரணமாகும் என்றனர்.

error: Content is protected !!