Skip to content

ஒரு மாதத்தில் விதிமீறிய 152 வாகனங்களுக்கு ரூ.22 லட்சம் அபராதம்

காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தலைமையில் காஞ்சிபுரம், உத்திரமேரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில், விதிமீறி அதிக பாரம் ஏற்றி வந்த சரக்கு வாகனங்கள், தகுதிச்சான்று புதுப்பிக்காத வாகனம், ஓட்டுநர் உரிமம், அனுமதி சீட்டு, வரி செலுத்தாத, தார்பாய் மூடாத, அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன் பொருத்திய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கடந்த ஒரு மாதத்தில் விதிமீறியதாக 152 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 22 லட்சத்து 7,735 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து அலுவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு விதிமீறிய வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். மேலும் ஓட்டுநர் உரிமம், தகுதி சான்று, அதிக பாரம் ஏற்றிச்செல்லும் வாகனம், பயணியர் மற்றும் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் எனவும்,  இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் எனவும் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!