இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் விராட்கோலி இன்று டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஏற்கனவே அவர் டி 20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் இன்று டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் விலகி விட்டார். இனி அவர் ஒன்டே போட்டிகளில் மட்டுமே ஆடுவார்.
கோலிக்கு தற்போது 36 வயது ஆகிறது. 2011ல் மேற்கு இந்திய தீவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய கோலி இதுவரை 123 டெஸ்ட்(210 இன்னிங்ஸ்) மூலம் 30 சதங்கள் அடித்து உள்ளார். 9230 ரன்கள் குவித்து உள்ளார். 31 அரை சதம் அடித்துள்ள கோலி 13 போட்டிகளில் அவுட் செய்யப்படவில்லை.
டெஸ்ட்களில் மட்டும் 1027 பவுண்டரிகளும், 30 சிக்சர்களும் அடித்து, 121 கேச் பிடித்து உள்ளார். 14 வருட டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை நிறைவு பெற்றதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ள கோலி, டெஸ்ட் கிரிக்கெட் தனக்கு நல்ல பாடங்களை கற்று தந்துள்ளதாகவும் கூறி உள்ளார். கடினமான முடிவாக இருந்தாலும், சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு . டெஸ்ட் கிரிக்கெட் முடிவு மறக்க முடியாத ஒன்று என்றும் அவர் கூறி உள்ளார்.
ரோகித் சர்மா கடந்த வாரம் ஓய்வை அறிவித்த நிலையில் இன்று கோலியும் ஓய்வை அறிவித்தார். இது இந்திய டெஸ்ட் அணிக்கு ஒரு இழப்பாகவே பார்க்கப்படுகிறது.