அரியலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தாலுகாவை சேர்ந்த மருத்துவர் வந்தனாவிற்கும் தென் அமெரிக்கா ஈகுவடாரை சேர்த்த மருத்துவர் ஆண்ட்ரஸ் ஆகியோருக்கு விருத்தாசலத்தில் இன்று தமிழ் மரபு படி திருமணம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தெற்கு பெரியார் நகரில் வசிப்பவர் பாரதி சத்தியபாமா தம்பதியினர். இவர்களின் இளைய மகள் வந்தனா சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக(MBBS) பயிற்சி முடித்து அமெரிக்காவில் உள்ள ரெட்கெர்ஸ் யுனிவர்சிட்டியில் பொது மருத்துவ துறையில் பட்ட மேற்படிப்பு (MD) முடித்துள்ளார். தற்பொழுது அமெரிக்காவில் உள்ள ஹீஸ்ட்டன் டெக்ஸாஸ் நகரில் புற்றுநோய் பிரிவில் சிறப்பு பட்டமேற் படிப்பை

மேற்கொண்டு வருகிறார். பட்ட மேற்படிப்பின் போது தென் அமெரிக்கா ஈக்வடார் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ஆண்ட்ரஸை சந்தித்து பழகியுள்ளார். இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இதனையடுத்து இருவீட்டாரின் சம்மதத்துடன் இன்று விருதாச்சலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ் பாரம்பரிய படி திருமணம் நடைபெற்றது. நேற்று குதிரை சாரட் வண்டியில் பெண் அழைப்பு ஊர்வலம் மற்றும் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று காலை மாப்பிள்ளை காசி யாத்திரை, ஊஞ்சல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் சுற்றத்தாரின் மத்தியில் நடைபெற்றது. இதன் பின்னர்

தமிழ்ப்பெண் வந்தனாவை தென் அமெரிக்கா மாப்பிள்ளை ஆண்ட்ரஸ் மாங்கல்யம் அணிவித்து தனது மனைவியாக்கிக் கொண்டார். மணமகன் ஆண்டஸின் பெற்றோர் பாட்ரிசியா கால்டெரான், ரோஷியோ வல்லாடரெஸ், தங்கை காமிலா வல்லாடெரஸ், மணமகனின் பெரியப்பா குடும்பத்தினர் ஆகியோரும் தமிழ் மரபு படி வேஷ்டி புடவை அணிந்து தமிழரின் திருமண சடங்குகள்

அனைத்தையும் கேட்டு உணர்ந்து அதன்படி திருமண நிகழ்ச்சி அனைத்திலும் பங்கெடுத்து மகிழ்ச்சியுடன் செய்தனர். மருத்துவர் வந்தனாவின் சகோதரர் வசந்த்திற்கும் கடந்த 2018ம் வருடம்

இதே திருமண மண்டபத்தில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பியா என்ற மணமகளை தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

