விருதுநகரில் இருந்து மதுரைக்கு 12ம் வகுப்பு தேர்வெழுதச் சென்ற மாணவி துர்கா தேவி விபத்தில் உயிரிழந்தார். விருதுநகர் மாவட்ட ஆவியூர் பகுதியை சேர்ந்த துர்கா தேவி மதுரை நிர்மலா பள்ளியில் +2 படித்துவந்துள்ளார். இந்நிலையில் இன்று +2 பொதுத்தேர்வு எழுதுவதற்காக ஆவியூரில் இருந்து தனது தந்தையுடன் பைக்கில் வந்து கொண்டிருந்த போது வலையன்குளம் அருகே பைக்கில் இருந்து கீழே விழுந்தபோது மாணவி மீது அரசு பேருந்து மோதியதில் படுகாயமடைந்தார். இதையடுத்து மாணவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றபோது மாணவி உயிரிழந்தார். இது குறித்து பெருங்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

