Skip to content

பலரின் தூக்கத்தை கலைத்த விழிஞ்சம் துறைமுக திறப்பு விழா- மோடி பேச்சு

கேரளாவின் திருவனந்தபுரத்தில் விழிஞ்சம் துறைமுகத்தை அதானி நிறுவனம் பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்பின் கீழ் ரூ.8,867 கோடி செலவில் அமைக்கப்பட்டது.விழிஞ்சம் துறைமுகத்தில் கப்பல் நிறுத்தம் நாட்டிலேயே மிக ஆழமானது. இது 3 கி.மீ தூரம் நீண்டுள்ளது. இங்கு 28 மீட்டர் உயரத்துக்கு கட்டப்பட்டுள்ள 9 மாடி கட்டிடம் மிகப் பெரிய பொறியில் சாதனை. இங்கு கடந்த 3 மாதங்களாக நடைபெற்ற பரிசோதனையில் 272-க்கு மேற்பட்ட சரக்கு கப்பல்கள் துறைமுகத்துக்கு வந்து சென்றுள்ளன. 5 லட்சத்து 50,000 கன்டெய்னர்களுக்கு மேல் இங்கு கையாளப்பட்டுள்ளது. நாட்டின் 75 சதவீத சரக்கு கன்டெய்னர்களை இதுவரை இலங்கையில் உள்ள கொழும்பு துறைமுகம்தான் கையாண்டது. இதனால் நமக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இனி சரக்கு கன்டெய்னர்களின் போக்குவரத்து விழிஞ்சம் துறைமுகம் மூலம் நடைபெறும். நாட்டிலேயே மாநில அரசிடமிருந்து மிக அதிகளவிலான முதலீட்டை விழிஞ்சம் துறைமுகம் பெற்றுள்ளது. இத்திட்டத்தின் மொத்த செலவில் 3-ல் இரண்டு பங்கை கேரள அரசு அளித்துள்ளது.
இங்கு சென்னை ஐஐடியால் உருவாக்கப்பட்ட ஏஐ கப்பல் போக்குவரத்து மேலாண்மை அமைப்பு செயல்பாட்டில் உள்ளது. இங்கு மாதத்துக்கு 1 லட்சம் சரக்கு கன்டெய்னர்களை கையாள முடியும். மிகப் பெரிய சரக்கு கப்பல்களில் ஒன்றான் எம்எஸ்சி துருக்கி விழிஞ்சம் துறைமுகம் வந்து சென்றது முக்கியமான நிகழ்வாகும். அதிக சிறப்பம்சங்களுடன் கூடிய விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் மோடி இன்று முறைப்படி திறந்து வைத்து உரையாற்றினார். அப்போது அவர்பேசியதாவது:
இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கம் பினராயி விஜயன்,  அந்த கூட்டணியின் முக்கிய தூண்.  காங்கிரஸ் எம்.பி. சசிதரூரும் இந்த மேடையில்  இருக்கிறார் .  இந்த  காட்சி பலரின் தூக்கத்த்தை  கலைக்கக் கூடியது.  பெரிய கப்பல்கள் வந்து செல்லும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.தனியார் பங்களிப்புடன் கூடிய இந்த துறைமுகத்தை  கம்யூனிஸ்ட் அரசும் ஆதரித்துள்ளது. இந்தியாவின் கடல்சார்  பலத்தின் அடையாளம் தான் இந்த துறைமுகம்,  கொழும்பு, சிங்கப்பூர் துறைமுகங்களை சார்ந்திருப்பதை இந்த துறைமுகம் குறைக்கும். இவ்வாறு  பிரதமர் மோடி பேசினார்.
   
error: Content is protected !!