தமிழகத்தில் தற்போது வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடங்கப்பட்டுள்ளது திமுக கட்சிகளின் எதிர்ப்பை தாண்டி தேர்தல் ஆணையம் பணிகளை தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர் பகுதி 14 வது வார்டு திரு வி கா ரோடு பகுதியில் வாக்கு சாவடி நிலை அலுவலர்கள் மூலம் கணக்கெடுக்கும் படிவம் வீடு வீடாக சென்று வழங்கினர். இதனை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் வேலையில் தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் SIR பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் 2026 சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற உள்ளதால் நவம்பர் 4 முதல் டிசம்பர் நான்காம் தேதி வரை ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவத்தினை விநியோகிக்க உள்ளனர்.
வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவத்தினை பூர்த்தி செய்து எவ்வித சான்றுகளும் இணைக்காமல் பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவத்தினை மட்டும் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தினர்.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடம் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கோட்டாட்சியர் வரதராஜன் மற்றும் தேர்தல் தாசில்தார் திருமலை மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்..

