Skip to content

அமைச்சர் ரகுபதி புதுகை, அறந்தாங்கியில் வீடு வீடாக சென்று வாக்காளர் சேர்ப்பு

தமிழ்நாடு முதலமைச்சர்   மு.க. ஸ்டாலின்  வழிகாட்டுதலின்படி
புதுக்கோட்டை மாநகராட்சி 27வது வார்டு பகுதியில்  இன்று  ஓரணியில்தமிழ்நாடு வாக்காளர் சேர்ப்பு இயக்கம் தொடங்கியது.

இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி  இதனை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக பொருளாளர் எம்.லியாகத்தலி, மாநகர அவைத்தலைவர் அ.ரெத்தினம்,வட்டகழகசெயலாளர்ஆறுமுகம்,வட்டபிரதிநிதி சேட் என்ற ஷாஜகான்
மற்றும் பலர் பங்கேற்று அந்த வார்டில் உள்ள அனைத்து வீடுகளக்கு சென்று திமுக அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்து,  புதிய  திமுக உறுப்பினர்களை சேர்த்தனர்.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும்,  30 சதவீத வாக்காளர்கள் திமுக  உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்ற இலக்குடன் இந்த ஓரணியில் தமிழ்நாடு  இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து 45 நாட்கள் இந்த இயக்கம் நடைபெறும்.
கழக அரசின் சாதனை திட்டங்களை
வீடு வீடாக சென்று பிரசாரம் செய்தனர்.

முன்னதாக அறந்தாங்கி நகரத்தில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை யை இயற்கை வளங்கள்துறை அமைச்சர் எஸ் ரகுபதி தொடங்கி வைத்தார்.  அவருடன்  திமுக நிர்வாகிகள்
பரணிகார்த்திகேயன், ராஜேந்திரன் ,பைனான்ஸ் முத்து மற்றும்  திரளானோர் உடன்  சென்று வாக்காளர் சேர்ப்பு பணியில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!