Skip to content

கரூரில் 23 இடங்களில் திட்டப்பணிகளை VSB தொடங்கி வைத்தார்

கரூரில் தார் சாலை அமைத்தல் மழைநீர் வடிகால் வாய்க்கால் கழிப்பறை பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட பணிகளுக்கான பூமி பூஜையை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி துவங்கி வைத்தார். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பணிகளுக்கான 8.08 கோடி மதிப்பில் பூமி பூஜையிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தலைமையில் முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற

உறுப்பினருமான செந்தில் பாலாஜி துவங்கி வைத்தார். கரூரில் 23 இடங்களில் திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். இதில் வஞ்சியம்மன் கோவில் தெரு, பசுபதிபாளையம், அருணாச்சலம் நகர், ராமானுர், மரியம் டீச்சர் லைன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தார் சாலை அமைத்தல், மழைநீர் வடிகால் சீரமைத்தல், பேவர் பிளாக் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான பூமி பூஜையிட்டு நிகழ்ச்சியில் துவங்கி வைத்தார்.

error: Content is protected !!