Skip to content

கரூர் அரவக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ உடலுக்கு VSB நேரில் அஞ்சலி…

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியை சார்ந்த M.A. கலிலூர் ரகுமான் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 2006 ஆம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இரண்டு முறை பள்ளப்பட்டி தேர்வு நிலை பேரூராட்சி தலைவராக பதவி வகித்தார். மேலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில கௌரவ ஆலோசகராக இருந்துள்ளார் இந்த நிலையில் நேற்று உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர் குறிப்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இன்று இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தேசிய தலைவர் கே. எம். காதர் மொகிதீன், முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி இல்லத்திற்கு சென்று உயிரிழந்த கலிலூர் ரகுமான் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். தொடர்ந்து அவரது உடல் பள்ளப்பட்டி மேற்கு பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்ய எடுத்துச் சென்றனர்.

error: Content is protected !!