Skip to content

VSBயின் கனவு திட்டமான- நெரூர்-உன்னியூர் காவேரி பாலம் இன்று திறப்பு

கரூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, கரூர் மாவட்டம் நெரூர் – திருச்சி மாவட்டம் உன்னியூர் இடையே, காவிரி ஆற்றின் குறுக்கே, உயர்மட்ட பாலத்தை காணொளி வாயிலாக முதல்வர் தொடங்கி வைத்த பின்பு ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி.

கரூர் மாவட்டத்தில் இருந்து திருச்சி மாவட்டம் உன்னியூர், காட்டுப்புத்தூர், அவ்வழியே திருச்சி, துறையூர், பெரம்பலூர் செல்வதற்கு பல கிலோமீட்டர் சுற்றி வளைத்து மக்கள் சென்றுக் கொண்டிருந்தனர்.

நெரூர் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, கரூர் மாவட்டம் நெரூர் மற்றும் திருச்சி மாவட்டம் உன்னியூர் இடையே காவிரியாற்றின் குறுக்கே ரூ. 101.30 கோடி மதிப்பில், சுமார் 1.10 கி.மீட்டர் நீளம்,

12.90 மீட்டர் அகலத்துடன், புதிய உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

இணைப்புச் சாலையுடன் சேர்த்து சுமார் 2.25 கி.மீட்டர் நீளமுள்ள இந்த பாலத்தினால், 35-40 நிமிட பயண நேரமும், 25-30 கி.மீட்டர் பயண தூரமும் மக்களுக்கு மிச்சமாகிறது.

நெரூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்து

கொண்டு பாலத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த பின்பு பொதுமக்களுடன் இணைந்து அரசு பேருந்தில் பயணம் செய்தார்.

கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி செய்தியாளரிடம் கூறுகையில்: 50 ஆண்டு கால

கோரிக்கை நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தமிழக முதல்வர் திறந்து வைத்துள்ளார்.

இந்தப் பாலம் மட்டுமல்லாமல் கோயம்பள்ளியில் இருந்து மேலப்பாளையம் இடையே ஏற்கனவே 15

கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலத்திற்கு 11 கோடி ரூபாய் நிதி கொடுத்து அணுகு சாலை அமைக்கும் பணி நடைபெற்று கொண்டுள்ளது.

சுற்றுவட்ட சாலை அமைக்கின்ற பொழுது சோமூர் வீரராக்கியத்தை இணைக்கின்ற வகையில் ஒரு பாலம் அமைய உள்ளது.

தீவு போல இருந்த பகுதிக்கு 3 பாலங்களை முதல்வர் வழங்கி உள்ளார் அதில் முதல் பாலம் இன்று திறக்கப்பட்டுள்ளது. எனக்கு இந்தத் திட்டம் ஒரு கனவு திட்டமாகும் தேர்தல் வருகின்ற பொழுது இந்தப் பணிகளை செய்ய வேண்டும் என்று நினைப்பதுண்டு

சுற்றுவட்ட சாலையை பொருத்தவரை முதல் கட்டமாக ஈரோடு சாலையில் தொடங்கி சேலம் பைபாஸ் வரை நிலம் எடுப்பதற்கு 72 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.அந்தப் பணி நடைபெற்று வருகிறது

அடுத்து இரண்டாம் கட்டமாக சேலம் பைபாஸ் தொடங்கி 16 கால் மண்டபம் வரை சுற்றுவட்ட சாலை அமைப்பதற்காக கோப்புகள் தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது ஒப்புதல் கிடைத்தவுடன் பணியை தொடங்க உள்ளனர். கரூரிலிருந்து சென்னைக்கு செல்வதற்காக அரசு பேருந்துகள் இயக்கப்படும் என கூறினர்.

error: Content is protected !!