திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கருப்பனூர் பகுதியைச் சேர்ந்த ஜானி பாஷா மகன் வாஜித் (43) என்பவர். இவர் திருப்பத்தூரில் உள்ள பூரா மசூதி, ஜமியா மசூதி, கும்மத் தர்கா, கோட்டை மசூதி மற்றும் ஈத்கா மசூதி, ஆகிய மசூதிகளுக்கு சொந்தமான வக்ஃபு சொத்துக்களை 1938 ஆம் ஆண்டிலிருந்து 2025 ஆண்டு தற்போது வரை முன்னாள் மற்றும் இந்நாள் முத்தவள்ளிகள் தனி நபர்கள் மற்றும் தங்களுடைய உறவுமுறை சொந்தங்களுக்கு சுமார் 200 கோடிக்கு மேல் சொத்துக்களை விற்று உள்ளனர். நான்கு மாதங்களாக சேகரித்து வைத்த ஆவணங்களை கட்டு கட்டாக எடுத்து வந்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் முறை கேட்டில் ஈடுபட்ட ஜமாத் மூத்தவல்லிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தார்.
வக்பு வாரிய சொத்தை 200 கோடிக்கு மேல் விற்பனை… திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார்
- by Authour
