Skip to content

கரூர் மாயனூர் காவிரி கதவனுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணை 98 மதகுகள் கொண்டதில் ஒரு டிஎம்சி அளவிற்கு தண்ணீர் தேக்கி வைக்கலாம்,

கரூர், மாயனூர் காவிரி கதவணைக்கு நேற்று 10,441 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் நீர்வரத்து அதிகரித்து இன்று காலை நிலவரப்படி 11,760 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.

இதில் 11,240 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றிலும், தென்கறை வாய்க்காலில் 400 கன அடியும், கட்டளை மேட்டு வாய்க்காலில் 50 கன அடியும், புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் 50 கன அடியும் விவசாய பாசனத்திற்காக திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசன விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி கதவனைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

error: Content is protected !!