தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது மேலும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணை2 தினங்களுக்கு முன்பு முழு கொள்ளளவை எட்டியதால் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது இதன் காரணமாக திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
54 ஆயிரம் கன அடியாக உயர்வு
நேற்று மாலை நிலவரப்படி 39 ஆயிரத்து 541 கன அடி நீர் வந்தது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து மேலும் 54 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது.
இதில் 12,800 கன அடி நீர் காவிரி ஆற்றிலும், 41,000 கன அடி நீர் கொள்ளிடம் ஆற்றிலும் திறந்து விடப்பட்டது.
மீதமுள்ள 200 கன அடி நீர் அய்யன், பெருவளை, புள்ளம்பாடி ஆகிய வாய்க்கால்களில் திறந்து விடப்பட்டது.
இதனால் காவேரி கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் 2 கரைகளையும் தொட்டபடி கரைபுரண்டு ஓடுகிறது கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் கால்நடைகளை ஆற்றுப்பகுதிகளில் கொண்டு செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேபோன்று நேற்று 3வது நாளாக மாவட்டம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது.
மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 562 மில்லி மீட்டர் மழை பதிவானது கல்லக்குடி 28.4 ,லால்குடி 42.4 ,நந்தியாறு அணைக்கட்டு 21, புள்ளம்பாடி 51.2 ,தேவி மங்கலம் 5.8, சமயபுரம் 9, சிறுகுடி 11.4, வாத்தலை அணைக்கட்டு 31 ,
பொன்னணி ஆறு அணை 32, ,கோவில்பட்டி 6.2 ,மருங்காபுரி 12.4, ,முசிறி 15, தா.பேட்டை 10, நவலூர் கொட்டப்பட்டு 8, துவாக்குடி 66, கொப்பம்பட்டி 9, தென்பற நாடு 10, துறையூர் 30, பொன்மலை 50.4, திருச்சி ஏர்போர்ட் 40.4, திருச்சி ஜங்ஷன் 28, திருச்சி டவுன் 45 என மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.