கோவை, பொள்ளாச்சி ஆழியார் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் உள்ள 22 ஆயிரத்து332 ஏக்கர் விளை நிலம் பயன்பெறும் வகையில் ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையைடுத்து ஆழியார் அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு ஆணையிட்டது. அதன்படி இன்று பொள்ளாச்சி ஆழியார் அணையில் இருந்து பொள்ளாச்சி, வேட்டைக்காரன் புதூர், ஆழியார் ஊட்டுக்கால்வாய் வழியாக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு

தண்ணீர் திறந்து விடப்பட்டது. அனையில் இருந்து கால்வாய் வழியாக வெளியேறிய தண்ணீரை புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் மற்றும் நீர் பாசன துறை அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர். அனையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் 135 நாட்களுக்கு உரிய இடைவெளி விட்டு 2ஆயிரத்து 734 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மூலம் அங்கலக்குறிச்சி, வேட்டைக்காரன் புதூர்,கோட்டூர், காளியபுரம், ஊத்துக்குளி ஆகிய பகுதிகளில் தென்னை, நிலக்கடலை, நெல் சாகுபடி செய்ய ஏதுவாக இருக்கும் என்றும்,புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

