Skip to content

கரூர் அருகே தர்பூசணி வாகனம் கவிழ்ந்து விபத்து

நாமக்கல் மாவட்டத்தில் இருந்து தர்பூசணிகளை டாடா ஏஸ் வாகனத்தில் ஏற்றி தென்காசி நோக்கி விற்பனைக்காக கொண்டு சென்றனர். அப்போது கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திருக்காம்புலியூர் பாலம் அருகே அதிவேகமாக இறங்கிக் கொண்டிருந்தபோது வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் சாலையோர தடுப்பு சுவரில் மோதிய வாகனம் சாலையிலேயே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

விபத்தினால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

டாடா ஏஸ் வாகனத்தில் அதிக எடையில் தர்பூசணிகள் ஏற்றிச் சென்றதே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

error: Content is protected !!