மதுரை அதிமுக அலுவலகத்தில் ஐடி விங் சார்பில் மொபைல் செயலியை மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது: அதிமுக ஆட்சி காலத்தில் வெங்காயத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. எகிப்திலிருந்து கொண்டு வந்தோம். வடஇந்தியாவில் இருந்து காய்கறிகளை கொண்டு வந்து மக்களுக்கு வழங்கினோம். தேர்தலுக்காக அமைப்பது தான் கூட்டணி. தற்போது திமுக கூட்டணி கட்சிகள் தாலி கட்டிய மனைவி போன்று உள்ளார்கள். தேர்தலில் மக்கள் தான் முடிவெடுப்பார்கள்.
அதிமுக ஆட்சி அமைந்ததும் பூரண மதுவிலக்கு குறித்து எடப்பாடி பழனிசாமி தான் முடிவு எடுப்பார் என்று கூறினார். அப்போது, ‘‘நடிகர் விஜய் பிரசாரம் துவக்க உள்ளாரே’’ என கேட்டதும், வழக்கமான தனது டிரேட் மார்க் புன்னகையுடன் கையெடுத்து கும்பிட்டு, ‘‘இதற்கு மேல் பேச மாட்டேன்’’ என்றார்.

