Skip to content

திமுக கூட்டணியின் வெற்றிக்காக அரும்பாடுபடுவோம்: திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தீர்மானம்

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் – மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் தலைமையில், மாவட்ட பொருளாளர் முரளி முன்னிலையில் 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா கூட்டணி மற்றும் திமுக தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

நிர்வாகிகளின் ஆலோசனை படி எடுக்கப்பட்ட தீர்மானங்கள்

  1. திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் அனைத்து நிர்வாகிகளும், தேர்தல் பிரச்சாரம் நடைபெறும் நாட்களில், சொந்த தொழில் மற்றும் குடும்ப பணிகளை ஒதுக்கி, இந்தியா கூட்டணி – தமிழ்நாடு தலைமை திமுக மற்றும் தோழமை கட்சிகளுடன் இணைந்து வேட்பாளர்களின் வெற்றிக்கு அரும்பாடுபடவேண்டும்.
  2. 65 வார்டுகளிலும் காரியகமிட்டி அமைத்து, வேட்பாளரின் வெற்றிக்காக, தெருமுனை பிரச்சாரம் நடத்த வேண்டும்.
  3. தகவல் தொழில்நுட்பம் பயனோடு தேர்தலை சிறப்பாக அணுகும் வகையில், நமது தலைமை அலுவலகமான தியாகி அருணாச்சலம் மன்றத்தில், வார்ரூம் அமைத்து பெண்கள் மற்றும் இளைஞர்களை கவரும் வகையில் செயற்கை நுண்ணறிவு (AI) வீடியோ தினந்தோறும் வெளியிட வேண்டும்.
  4. திருச்சி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டியை சார்ந்த முக்கிய நிர்வாகிகள், 65 வார்டுகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமித்து தேர்தல் பணியாற்றிட வேண்டும்.

நிகழ்ச்சியில் கோட்ட தலைவர்கள் மலைக்கோட்டை வெங்கடேஷ் காந்தி, ஸ்ரீரங்கம் ஜெயம்கோபி, திருவண்ணாக்கோவில் தர்மேஷ், வரகனேரி இஸ்மாயில், காட்டூர் ராஜா டேனியல் ராய், அரியமங்கலம் அழகர், சுப்ரமணியபுரம் எட்வின், ஏர்போர்ட் கனகராஜ், ஜங்ஷன் பிரியங்கா பட்டேல், புத்தூர் மலர் வெங்கடேஷ், உறையூர் பாக்யராஜ், பாலக்கரை இருதயராஜ், தில்லைநகர் ராகவேந்திரா, கிருஷ்ணா, அணி தலைவர்கள் முன்னாள் ராணுவ அணி ராஜசேகர், மாணவர் காங்கிரஸ் நரேன், இளைஞர் காங்கிரஸ் விஜய் பட்டேல், எஸ்சி பிரிவு கலியபெருமாள், சிறுபான்மை பிரிவு மொய்தின், ஜவஹர் பால் மஞ்ச் எபினேசர், அமைப்பு சாரா மகேந்திரன், ஐடி பிரிவு கிளமெண்ட், ஊடக பிரிவு செந்தில், இலக்கிய பிரிவு பத்பநாபன், விவசாய அணி அண்ணாதுரை, கலைபிரிவு சுப்புராஜ், என்ஜிஓ அணி கண்ணன், விமல், சம்பத் மற்றும் பல நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!