Skip to content

சட்டமன்ற தேர்தலில் கோவையில் 10 தொகுதியிலும் வெற்றி பெறுவோம்- VSB பேச்சு

சிங்காநல்லூர் தொகுதி அலுவலகத்தை திறந்து வைத்து முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பேச்சு

வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் பணிக்காக கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி அலுவலகம் காமராஜர் ரோடு ராமானுஜர் நகரில் நேற்று திறக்கப்பட்டது. இதனை முன்னாள் அமைச்சரும், மேற்கு மண்டல கழக பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் பேசுகையில்;-

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், நடைபெற உள்ள மேற்கு மண்டல மகளிர் மாநாட்டில் பங்கேற்க மாண்புமிகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காலை 11 மணிக்கு கோவை வருகிறார். அவருக்கு கோவை விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். முழுக்க முழுக்க மகளிர் மட்டுமே பங்கேற்கும், மேற்கு மண்டல மகளிரணி மாநட்டல் ஒன்னரை லட்சம் மகளீர் பங்கேற்க உள்ளனர். விரைவில் கோவைக்கு மாண்புமிகு துணை முதல்வர் வருகை புரிய உள்ளார். கோவையில் ஹாக்கி மைதானத்தை திறந்து வைக்க உள்ளார். கோவையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜனதா பெற்ற ஓட்டுகளை கண்காணித்து மாற்று சிந்தனையில் உள்ள மக்களை சந்தித்து குறைகளை கேட்டு நிறைவேற்ற வேண்டும். பிற மாவட்டங்களை காட்டிலும் கோவை மாவட்டம் வளர்ச்சியில் முன்னேற்றம் அடைந்துள்ளது.
கோவையில் 10 சட்டமன்ற தொகுதிகளிலும் நிச்சம் வெற்றி பெறுவோம். இதற்காக கட்சி நிர்வாகிகள் பாடுபட வேண்டும். குறிப்பாக 10 தொகுதிகளில் முதல் வெற்றியாக சிங்காநல்லூர் வெற்றி பெற வேண்டும். சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 2 லட்சத்து, 54 ஆயிரம் வாக்காளர்களை பூத் கமிட்டி உறுப்பினர்கள் சந்திக்க வேண்டும். தகுதி உள்ள வாக்காளர்களை சேர்க்க உதவ வேண்டும். தகுதி இல்லாத வாக்காளர்களை நீக்கவும் வேண்டும். நாளையே தேர்தல் வைத்தாலும் தி.மு.க. தான் வெற்றி பெறும். அந்த அளவுக்கு தி.மு.க. தேர்தல் பணியில் தயாராகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, கோவை மாநகர் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பாபு ஏற்பாட்டில், கோயம்புத்தூர் சிவில் இன்ஜினியர் அசோசியேசன் நிர்வாகிகள் 30 க்கும் மேற்பட்டோர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

இந்த நிகழ்வுகளில், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை. செந்தமிழ்ச் செல்வன், நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், கலந்து கொண்டனர்.

error: Content is protected !!