தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகேயுள்ள அம்பலச்சேரியை சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன் (34). இவரும் இவரது நண்பர்களும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அரிவாளுடன் இருப்பது போன்று வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.
இதனையடுத்து மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உத்தரவின்பேரில், சாத்தான்குளம் டிஎஸ்பி ஆவுடையப்பன் தலைமையில், நாசரேத் இன்ஸ்பெக்டர் வனசுந்தர், சப்-இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அரிவாளுடன் இருப்பது போன்று வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட ராமசுப்பிரமணியன் மற்றும் அவரது நண்பர்களான நாசரேத் ஞானராஜ் நகரைச் சேர்ந்த தங்கத்துரை(24), சாத்தான்குளம் அருகே சடையன்கிணறு பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து(19), அம்பலச்சேரியை சேர்ந்த மாணிக்கராஜா(24), மீனாட்சிசுந்தரம்(21), அம்பலச்சேரியை சேர்ந்த தளவாய்பாண்டியன்(26) ஆகிய 6 பேரை தனிப்படையினர் கைது செய்தனர். பின்னர் 6 பேரும் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.