Skip to content

ஜெயங்கொண்டம்-1302 பயனாளிகளுக்கு ரூ.662.29 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகம் அரங்கில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், கல்வி, சுயதொழில் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விழாவின் நேரலை அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சுபம் திருமண மண்டபத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்துகொண்டார். அதனைத்தொடர்ந்து, முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், கல்வி, சுயதொழில் மற்றும் ரூ.662.29 இலட்சம் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை 1302 பயனாளிகளுக்கு வழங்கினார்.

முன்னதாக அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளினை முன்னிட்டு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

19.02.2024 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் சட்டமன்ற அறிவிப்பில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள ஊரக பகுதிகளில் 8.04 இலட்சம் குடும்பங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் 4.02 இலட்சம் குடும்பங்களுக்கு அரசின் உதவிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து வழங்கி விரைவில் அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்திட அரசு உறுதியாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தில் ஆதாவற்றோர், தனித்து வாழும் முதியோர். ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள், மனநலம் குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறப்புக் குறைபாடு உடைய குழந்தைகள் போன்ற சமூகத்தின் விளிம்புநிலையில் வாழ்ந்திடும் மக்கள் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டு பிற துறைகளுடன் இணைந்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மட்டுமின்றி கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, வீடுகள் போன்ற அனைத்து உதவிகளும் வழங்கப்படும். அரசிடம் உள்ள தரவுகள், கள ஆய்வு, மக்கள் பங்கேற்புடன் கலந்துரையாடல், கிராம சபை ஆகியவற்றின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள மிகவும் ஏழைக்குடும்பங்கள் கண்டறியப்படும். அரசிடம் உள்ள தரவுகளின்படி, CMTS Mobile App மூலம் 15.09.2025 முதல் கிராமப்புறத்தில் உள்ள சமுதாய வள பயிற்றுநர்களின் உதவியுடன் கணக்கெடுப்பு நடத்தி மிகவும் ஏழை குடும்பங்களின் பல்வேறு அரசு துறைகளின் தேவைகள் கண்டறியப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இன்றையதினம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தில் கல்வி, சுயதொழில் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியதை தொடர்ந்து அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சுபம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் அரசு துறைகளில் சார்பில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தில் கல்வி, சுயதொழில் மற்றும் ரூ.662.29 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை 1302 பயனாளிகளுக்கு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.

அதன்படி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வதார இயக்கம் சார்பில் 646 பயனாளிகளுக்கு ரூ.299.14 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், நகராட்சி துறை சார்பில் 100 பயனாளிகளுக்கு ரூ.15 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 30 பயனாளிகளுக்கு ரூ.2 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், தாட்கோ சார்பில் 201 பயனாளிகளுக்கு ரூ.138.82 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 71 பயனாளிகளுக்கு ரூ.71 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் (கூட்டுறவு) சார்பில் 45 பயனாளிகளுக்கு ரூ.21.54 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், தமிழ்நாடு தொழில் வணிக துறை, மாவட்ட தொழில் மையம் சார்பில் 8 பயனாளிகளுக்கு ரூ.38.63 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில் 24 பயனாளிகளுக்கு ரூ.8 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், வேளாண் மற்றும் பொறியியல் துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.3.15 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், முன்னோடி வங்கி சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.1.38 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், தொழிலாளர் நலத்துறை சார்பில் 107 பயனாளிகளுக்கு ரூ.4.97 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், சமூக நலத்துறை சார்பில் 57 பயனாளிகளுக்கு ரூ.58.50 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.16,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் என மொத்தம் 1302 பயனாளிகளுக்கு ரூ.662.29 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர்.ஆ.ரா.சிவராமன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் சு.தேன்ராஜ், ஜெயங்கொண்டம் நகர்மன்றத் தலைவர் சுமதி சிவக்குமார், அரியலூர் நகர்மன்ற தலைவர் சாந்தி கலைவாணன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பி.சுமதி, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, ஜெயங்கொண்டம் நகர்மன்ற துணைத்தலைவர் கருணாநிதி, மாவட்ட நிலை அலுவலர்கள், இதர அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!