Skip to content

மேற்கு வங்க ஆளுநர் ராஜினாமா: மம்தா பானர்ஜி அதிர்ச்சி

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் மேற்கு வங்காளத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில், மேற்கு வங்காள ஆளுநர் ஆனந்த போஸ் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

இந்தநிலையில் இது குறித்து மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:- மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸின் திடீர் ராஜினாமா செய்தி எனக்கு அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கிறது. அவரது ராஜினாமாவுக்கான காரணங்கள் தற்போது எனக்குத் தெரியவில்லை. மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆளுநர் நியமனம் குறித்து உள்துறை அமைச்சகம் மரபுகளின்படி என்னிடம் முறையாக தெரிவிக்கவில்லை. சட்டமன்ற தேர்தலையொட்டி உள்துறை அமைச்சகம் தந்த அழுத்தத்தால் போஸ் ராஜினாமா செய்திருக்கலாம் என அதில் பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!