தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரவி மோகன். சமீபகாலமாக சர்ச்சையிலும், விமர்சனங்களிலும் சிக்கி தவித்த ரவி மோகன் தற்போது அதில் இருந்து மீண்டு வருகிறார். ஒருபக்கம் நெருக்கடி இருந்தாலும் திரைத்துறையில் தனது பங்களிப்பை சிறப்பாக செய்து வரும் ரவி மோகன் நடிப்பு, தயாரிப்பு, இயக்கம் என பிசியாகவும் வலம் வருகிறார். மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தற்போது பிரிந்து வாழும் ரவி மோகன், மனைவியிடம் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இதற்கிடையில், ரவிமோகனுக்கு அவரது தோழியும், பாடகியுமான கெனிஷா பக்கபலமாக இருந்து வருகிறார். பொது விழாவிலும் கூட இருவரும் ஒன்றாக பங்கேற்பைைத
வாடிக்கையாக கொண்டுள்ளனர். சமீபத்தில் கூட கெனிஷாவின் பிறந்தநாளை பாலி தீவில் ரவிமோகன் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தார். இது குறித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகின.
இந்த நிலையில், ’இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் ரவிமோகன் வெளியிட்டுள்ள ஒரு பதிவு தற்போது கவனம் பெற்றுள்ளது. ரவிமோகன் வெளியிட்ட அந்த பதிவில்
கூறியிருப்பதாவது: “பல ஆண்டுகளாக சுதந்திரம், மரியாதை மற்றும் சிறிய சிறிய சந்தோஷங்களை எதிர்பார்த்து பிரார்த்தனை செய்து வந்தேன். நான் எதிர்பார்த்தது தற்போது கிடைத்துள்ளது. இவை அனைத்தும் தங்கத்தை விட மதிப்புமிக்கவை”என்று பதிவிட்டுள்ளார்.

