காங்கிரஸ் கட்சி நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி தொடர்ந்து தவெகவையும் அதன் தலைவர் விஜயையும் பாராட்டி பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரவீன் சக்ரவர்த்தியின் இந்த செயல்பாடு தமிழக காங்கிரசில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் தவெக-வுக்கு ‘விசில்’ சின்னத்தை அதிகாரப்பூர்வமாக ஒதுக்கியுள்ளது. இது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், காங்கிரஸ் தரப்பிலிருந்து பிரவீன் சக்ரவர்த்தி தமிழ்நாட்டில் 2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது என பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு காங்கிரசின் முன்னாள் மாவட்ட தலைவர் சிவராஜசேகரன் கடும் கண்டனம் தெரிவித்திருப்பதோடு ஜனநாயகத்திற்கு சங்கு ஊதியவர்களைக் கண்டிக்க திரானியற்றவர்கள் எதை ஊதி என்ன பயன்? என்று நேற்று இரவு தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

