2026 தொடக்கத்தில் சனி பகவான் குரு பகவான் வீட்டில் உள்ளார். அதன் பிறகு 2026 இறுதியில் சனி செவ்வாய் வீட்டிக்கு செல்லவுள்ளார். மருத்துவத்துறையில் புரட்சி ஏற்படும். விவசாயத்திலும் பெரிய முன்னேற்றம் காணப்படும். தங்கம் விலை உயர்வு அதிகமாக இருக்கும். நிலநடுக்கம், மழை வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் இருக்கும்.
2026 புத்தாண்டு பலன்
குஜராத், மும்பை நகரங்களில் பெரியளவுக்கு பாதிப்பு இருக்கும். இமயமலை சுற்றுவட்டார பகுதிகளில் சேதம் அதிகமாக இருக்கும். தமிழ்நாட்டில் மழை வெள்ளம் பாதிப்பு இருக்கும். உலகளவில் இலங்கை மீண்டும் பெரிய பிரச்சனைகளை சந்திக்கும். வெளி நாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு பல பகுதிகளில் பாதிப்பு இருக்கும். பெரிய நோய்கள் பரவும். தலைவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும்.
தீவிரவாதிகளின் தாக்கம் அதிகமாக காணப்படும். நடிகர்கள், விளையாட்டு துறை பிரபலங்கள் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். ஊடகம், ஐடி, உணவு, விவசாயம், உள்ளிட்ட துறைகளில் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும். புதிய தொழில் தொடங்குவோர் அந்த துறைகளை சார்ந்து திட்டமிட்டுக் கொள்ளவும். இந்த புத்தாண்டில் கடக ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
கடகம் புத்தாண்டு பலன்
கடக ராசிக்காரர்களுக்கு பெற்றோர், பெரியோரின் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நன்மை பயக்கும். பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், வியாபாரம் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண அமைப்பு, புத்திர சந்தான பாக்கியம், துணை அமைப்பு, காதல் அமைப்பு போன்றவை ஏற்கப்படும். மனைவியின் வாழ்க்கையில் இருந்த கஷ்டங்கள் அனைத்தும் தீரும்.
கஷ்டங்கள் நீங்கும்
மனைவியின் வேலை, உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் மங்களம் உண்டாகும். ஆடை ஆபரணங்கள் அனைத்தும் கடக ராசியினர் வீட்டில் உள்ளவர்களுக்கு கிடைக்கும். அனைத்து விதமான நன்மைகளும் நடக்கும். 2027 கடைசி வரை சனி பகவான் 9 ஆம் இடத்தில் வலிமையாக இருப்பதால் 5 வருடமாக இருந்து வந்த மனத் தாங்கல்கள், கஷ்டங்கள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும்.
சுபவிரய பிராப்தம்
வாகனத்தில் செல்லும்போது மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. மன அழுத்தம் வரும் வாய்ப்புள்ளதால் வயிறு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். சுப விரய பாக்கியம் உண்டாகும். 8 இல் உள்ள ராகு கடல் கடந்து தொழில் செய்யும் யோகம் ஏற்படும். வண்டி, வாகனங்களில் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு வாங்கும் யோகம் ஏற்படும்.
தொட்டதில் வெற்றி
எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். 2 ஆம் இடத்தில் கேது இருப்பதால் வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. அரசியல்வாதிகள் திடீரென பெரிய ஏற்றம் பெரும் யோகம் உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பேசும் வார்த்தைகளில் இனிமையைக் கடைப்பிடிப்பது நல்லது.
ஆரோக்கியம், வழிபாடு
இடது பக்க உறுப்புகள், இதயம், லிவர், கிட்னி தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. நவக்கிரகத்தில் இருக்கும் குரு பகவான், மகான்கள் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். கோளார் பதிகத்தைக் கேட்பது சொல்வது ராகு கேது தோஷத்தில் இருந்து நிவர்த்தியை ஏற்படுத்தும். வியாழக்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு உணவளிப்பது நன்மையைத் தரும்.

