துணை ஜனாதிபதி ஜெகதீப், ராஜினாமா செய்ததை தொடர்ந்து அந்த பதவிக்கு புதிதாக ஒருவரை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இதுபற்றி பா.ஜ.க. தலைவர் ஒருவர் கூறும்போது, புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. சர்ச்சைகளில் சிக்காத ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என நம்புகிறேன் என்றார்.
இந்த பதவிக்கு, பழம்பெரும் தலைவர் ஒருவரின் பெயர் பரிந்துரைக்கப்படலாம் என்றும் கூறினார். இந்நிலையில், ஐக்கிய ஜனதா தள கட்சியின் எம்.பி.யான ஹரிவன்ஷ் நாராயண் சிங், மாநிலங்களவையின் துணைத் தலைவராக உள்ளார். அவர் 2020-ம் ஆண்டு முதல் அந்த பதவியில் நீடித்து வருகிறார். அரசின் நம்பிக்கையை பெற்றுள்ள அவர், அந்த பதவிக்கு வருவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது என்றும் கூறப்படுகிறது.
ஹரிவன்ஷ் நாராயண்சிங், உ.பி.யை சேர்ந்தவர். பீகார் மாநிலத்தில் இருந்து எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர்.