தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தின் போரபண்டா பெத்தம்மா நகர் சமூகக் கூடம் அருகே முரளி வேணு மற்றும் சத்யவாணி (33) தம்பதிக்கு ருத்ராம்ஷ் (5) மற்றும் தன்விகா (2) ஆகியோருடன் வசித்து வருகின்றனர். மின்சாரத் துறையில் லைன்மேனாக பணிபுரியும் முரளி வேணு இந்த மாதம் 13 ஆம் தேதி இரவு 8 மணியளவில் வீட்டிற்கு வந்தார். அப்போது சத்தியவாணி தண்ணீரை கேஸ் அடுப்பில் சூடுபடுத்தினார். நாட்டில் சிலிண்டர் கிடைக்காமல் பலர் அவதிப்படும் நிலையில் சிலிண்டர் காலியானால் வருவதற்கு காலதாமதம் ஆகும் எனக்கூறி முரளி வேணு கேஸுக்குப் பதிலாக தண்ணீரை சூடுபடுத்த முடியாதா ?” என்று தனது மனைவியுடன் வாக்குவாதம் செய்தார். பின்னர் தனது தந்தையை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சத்யவாணி, முதலில் தனது இரு பிள்ளைகளையும் கழுத்தை நெரித்து கொல்ல முயன்றார்.
இரண்டு குழந்தைகளும் மயக்கமடைந்த பிறகு, அவர் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவு 9:57 மணியளவில் வீட்டின் உரிமையாளர் வெங்கடேஸ்வர ராவ் அவர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது, சத்யவாணி மின்விசிறியில் தொங்குவதைக் கண்டார். உடனடியாக போலீசாருக்குத் தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்குச் வந்த போலீசார், சத்யவாணியும் அவரது மகன் ருத்ராம்ஷும் ஏற்கனவே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர். இருப்பினும் மூச்சுத் திணறிக் கொண்டிருந்த இரண்டு வயது தன்விகாவைக் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சைக்கு பிறகு குழந்தை உயிர் பிழைத்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

