Skip to content

டிவி Volume-ஐ குறைக்க சொன்ன கணவரை கொன்ற மனைவி

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் மங்களகிரி மண்டலத்தின் பெடவட்லபுடி கிராமத்தைச் சேர்ந்த ஷேக் அகமது (26) ஏசி மெக்கானிக்காக பணிபுரிகிறார். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, மங்களகிரியைச் சேர்ந்த கிராந்தி என்ற பெண்ணைச் சந்தித்த ஷேக் அமகதுவுக்கு திருமணத்திற்குப் புறம்பான தொடர்பு ஏற்பட்டது. கிராந்திக்கு ஏற்கனவே திருமணமான நிலையில் அவரது முதல் கணவர் போலீஸ் வழக்கு காரணமாக சிறையில் உள்ளார். இந்தச் சூழலில், அகமதுவை மணந்து மங்களகிரியில் உள்ள அரசு வழங்கிய டிட்கோ வீட்டில் இருவரும் வசித்து வந்தனர். கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டு வந்தது.
இந்தச் சூழலில், ரம்ஜான் மாதம் விரதம் இருந்த ஷேக் அகமது மதியம் வீட்டிற்கு வந்தார். அந்த நேரத்தில், அவரது மனைவி கிராந்தி அதிக சத்தம் வைத்து கொண்டு டிவி பார்த்துக் கொண்டிருந்தார். கிராந்தியிடம் டி.வி. சத்தத்தைக் குறைக்கச் சொன்னதால் ​​கோபத்தில் தனது கணவரை ஷேக் அமகதுவை கத்தியால் குத்தினார். பலத்த காயமடைந்த அகமதுவை அப்பகுதி மக்கள் சீனகக்கானியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக விஜயவாடா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார். இதனையடுத்து ஷேக் அமகது தாயார் மஹாபி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த மங்களகிரி நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வீராசாமி வழக்குப்பதிவு செய்து கிராந்தியை கைது செய்தனர்.

error: Content is protected !!