Skip to content

கோவை அருகே சாலையை கடந்த காட்டு யானை.. பரபரப்பு

மேற்கு தொடர்ச்சி மலையில் ஏராளமான காட்டு யானைகள் இருக்கின்றன.இந்த காட்டு யானைகள் இரவு நேரங்களில் வனத்தை விட்டு வெளியே வருவது வழக்கம்.தடாகம்,மருதமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவு உட்கொண்டு காலை நேரங்களில் வனப் பகுதிக்கு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் கோவை மாவட்டம் கல்வீரம்பாளையம் அடுத்துள்ள பாரதியார் பல்கலைக்கழகம் மருதமலை சாலையில் காட்டு யானை சாலையை கடந்து சென்றது. இதனை பார்த்த அங்கு உள்ள பொது மக்கள் அந்த காட்டு யானை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.காட்டு யானை சிறிது நேரம் சாலையில் சுற்றிரிந்தால் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!