வால்பாறை அருகே சாலக்குடி செல்லும் வழியில் காட்டு யானை கூட்டங்கள் நடமாட்டம், கவனமாக செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தல். வால்பாறை- செப்-8 கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கேரளாவில் இருந்து இடம் பெயர்ந்து யானை கூட்டங்கள் அதிக அளவில் தென்படுகின்றன, இதையடுத்து வால்பாறையிலிருந்து மளுக்குப்பாறை கேரளா பெரியார் புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட சாலக்குடி செல்லும் வழியில் அதிக அளவில் மூங்கில் உள்ளதால் இதை சாப்பிட வனப்பகுதி விட்டு வெளியே வரும் காட்டு யானை கூட்டங்கள் சாலை ஓரம் அதிக அளவில் தென்படுகின்றன தற்போது மழை பெய்து உள்ள நிலையில் வனப்பகுதியில் தீவனங்கள் அதிகம் உள்ளது இதனால் காட்டு யானை கூட்டங்கள் அதிக அளவில் தென்படுகின்றன வால்பாறையில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் அதிரப்பள்ளி பால்ஸ் செல்லும் போது கவனமாக செல்லுமாறும் வனத்துறையினர் கூறுகையில் சாலக்குடி செல்லும் வழியில் கீழ் சோனா அனாய் கோட்டம் அதிகாலையில் யானைகள் நடமாட்டம் உள்ளது இதனால் அப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்துகின்றனர்.
வால்பாறை அருகே காட்டுயானைகள் கூட்டங்கள் நடமாட்டம்
- by Authour
