பாமகவில் அன்புமணி ராமதாஸ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக சமீபத்திய செய்திகள் தெரிவிக்கின்றன. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே கட்சி தலைமை மற்றும் அதிகாரம் தொடர்பாக மோதல் நீடித்து வருகிறது.
கடந்த ஆகஸ்ட் 19, 2025 அன்று, பாமகவின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு, அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அவருக்கு 24 மணி நேரத்திற்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியது. இந்த குற்றச்சாட்டுகளில், கட்சியில் பிளவு ஏற்படுத்தியதாகவும், மேடை நாகரீகமின்மை உள்ளிட்டவையும் அடங்கும். ஆனால், அன்புமணி இதுவரை பதிலளிக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், நேற்றைய தினத்துக்குள் அன்புமணி பதிலளிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் ஒழுங்கு நடவடிக்கைக் குழு மீண்டும் கூடி, அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்ய இருப்பதாகவும், இந்த முடிவு ராமதாஸிடம் பரிந்துரைக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியன.
இது தொடர்பாக தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாமக எம்எல்ஏ அருள், ”அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஒழுங்கு நடவடிக்கைக்குழுவின் அறிக்கை ராமதாஸிடம் சமர்ப்பிக்கப்பட்டது. பரிந்துரைகளை சீலிடப்பட்ட கவரில் வழங்கி உள்ளதாவும், முடிவினை பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பார் .
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது ஒழுங்கு நடவடிக்கைக் குழு அளித்துள்ள 16 குற்றச்சாட்டுகளை பரிசீலித்து, செப்டம்பர் 3ம் தேதிக்குள் ராமதாஸ் தனது முடிவை அறிவிப்பார் என தெரிவித்துள்ளார்.