Skip to content

ஐஸ்கிரீம் சாப்பிட்ட சிறுமியின் தொண்டையில் சிக்கிய கம்பி

ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்ட சிறுமியின் தொண்டையில் துருபிடித்த கம்பி சிக்கி கொண்டதால் அதிர்ச்சி சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரல்

தஞ்சை டவுன் கரம்பை கிழக்கு தெருவில் மூன்று சக்கர வாகனத்தில் விற்பனை செய்யப்பட்ட 45 ரூபாய் மதிப்பிலான பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீமை அதே தெருவில் வசித்து வரும் காவியா என்ற சிறுமி வாங்கி சாப்பிட்டு உள்ளார்.

அப்போது தொண்டையில் ஏதோ பொருள் ஒன்று சிக்கி கொண்டு வலியில் துடித்தார்.

பின்னர் தொண்டையில் கைவிட்டு அந்த பொருளை எடுத்து பார்த்த போது துருபிடித்த கம்பியை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவி பொற்றோர்களிடம் நடந்ததை தெரிவித்தார்.

உடனடியாக தஞ்சை ஆடக்கார தெருவில் செயல்பட்டு வரும் பி.ஆர்.எஸ்.ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரிடம் நடந்த விவரத்தை சிறுமியின் பெற்றோர் கூறி உள்ளனர்.

அதற்கு நிறுவன உரிமையாளர் முறையாக பதில் தரவில்லை என பெற்றோர்கள் தரப்பில் கூறப்படுகிறது இதனால் மாணவியின் பெற்றோர்கள் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

error: Content is protected !!