கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட லிங்கமநாயக்கன் பட்டியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக SDPI கட்சி சார்பில் லிங்கம் நாயக்கன் பட்டி பஞ்சாயத்து உட்பட்ட ரசூல் நகர், ஜாமியா நகர் பகுதிகளில் தற்போது வரை அடிப்படை வசதி செய்து தராமல் புறக்கணித்து வருவதாகவும், சென்னையில் போராடிவரும் துப்புரவு பணியாளர்களை நிரந்தர பணியாளராக அமர்த்திட வேண்டும், பஞ்சாயத்து துப்புரவு பணியில் சம்பளத்தை
5,000 இருந்து 15,000 ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும், கிராம சபை கூட்டங்களை கண்துறைப்பிற்காக நடத்துவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்புக்கொடி, கையில் பதாகை ஏந்தி கிராம சபை கூட்டத்தில் பங்கு பெறுவதற்கு ஊர்வலமாக நடந்து வந்தனர் அதிகாரிகள் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.