தஞ்சாவூர் அருகே தீராத வயிற்று வலி காரணமாக பெண் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் குமார் (43). விவசாயி. இவரது மனைவி நதியா (39). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நதியாவுக்கு அடிக்கடி வயிற்று வலி வரும் என்று கூறப்படுகிறது. மருத்துவ சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் நதியா மிகுந்த வேதனையில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 15ம் தேதி மாலை வீட்டில் யாரும் இல்லாத போது நதியா தூக்கு மாட்டிக் கொண்டுள்ளார். இதை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் பார்த்து ஓடி வந்து நதியாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே நதியா இறந்துவிட்டார்.
இதுகுறித்து நதியாவின் அண்ணன் கிருஷ்ணசாமி வல்லம் போலீசில் புகார் செய்தார். தொடர்ந்து வல்லம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் நதியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப;பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

